பண மேலாண்மை: வெற்றிக்கான திறவுகோல்களில் ஒன்று

நாணயங்களின் ஆன்லைன் வர்த்தகம் (ஃபாரெக்ஸ்), கிரிப்டோகரன்சிகள், சிஎஃப்டி, மற்ற நிதிச் சொத்துக்கள் (பங்குகள், தங்கம், எண்ணெய், மற்றவை) முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தனித்துவமான வாய்ப்புகளை வழங்குகிறது. இருப்பினும், நீண்டகால லாபத்தை அடையவும், அபாயங்களைக் குறைக்கவும் முறையான மூலதன மேலாண்மை அவசியம். இங்குதான் மூலதனங்களைக் கையாளுதல் அல்லது 'பண மேலாண்மை' என்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

மூலதனத்தைக் கையாளுதல் என்றால் என்ன?

மூலதனக் கட்டுப்பாடு, பண மேலாண்மை எனவும் அழைக்கப்படுகிறது, இது ஒரு முதலீட்டாளர் அல்லது வர்த்தகர் தங்கள் மூலதனத்தை பல்வேறு நிதி சொத்துக்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு இடையே எவ்வாறு விநியோகிக்கிறார் என்பதையும், அதேபோல் அபாயங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நிலை அளவுகளை எவ்வாறு நிர்வகித்தல் என்பதையும் தீர்மானிக்கும் ஒரு உத்தி ஆகும். நிதிச் சந்தைகள் நிலையற்றதாகவும் (volatile) கணிக்க முடியாததாகவும் இருக்கும். பண மேலாண்மையின் முதன்மையான குறிக்கோள், வர்த்தகர் அல்லது முதலீட்டாளரின் நிதிகளை இழப்புக் காலத்தின்போது முடிந்தவரை பாதுகாப்பதாகும், அதே நேரத்தில் இலாபகரமான வர்த்தக வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்துதல் ஆகும். பண மேலாண்மையில் பின்வரும் முக்கியக் கூறுகளும் அடங்கும்:

- நிலை அளவு: பண மேலாண்மை என்பது உங்கள் மூலதனத்தின் எந்த சதவீதத்தை நீங்கள் ஒரு பரிவர்த்தனைக்கு ஆபத்தில் வைக்கத் தயாராக உள்ளீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. பல நன்கு அறியப்பட்ட வல்லுநர்கள், ஒரு நிலைக்கான மொத்த மூலதனத்தில் 1-2% அளவு ஆபத்தை குறைக்க அறிவுறுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் ஆரம்ப மூலதனம் $10,000 என்றால், ஒரு பரிவர்த்தனைக்கான அதிகபட்ச ஆபத்து $100-200க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

- சொத்து பல்வகைப்படுத்தல்: பண மேலாண்மை என்பது பல்வேறு நிதிச் சொத்துக்களுக்கு இடையே மூலதனத்தை விநியோகிப்பதையும் உள்ளடக்கியது. நார்ட்எஃப்எக்ஸ் (NordFX) புரோக்கர் வழங்கும் சொத்துக்களின் பன்முகத்தன்மை ஆனது, இடர் குறைப்பு மற்றும் மிகவும் நெகிழ்வான போர்ட்ஃபோலியோவை அனுமதிக்கிறது. உதாரணமாக, ஃபாரெக்ஸ் சந்தையில் உங்கள் எல்லா மூலதனத்தையும் ஒரு நாணய ஜோடியாக முதலீடு செய்வதற்குப் பதிலாக, நீங்கள் அதைப் பல நாணய ஜோடிகள், வெவ்வேறு நிறுவனங்களின் பங்குகள் அல்லது பிற நிதிசார் முறையாவணங்களில் விநியோகிக்கலாம். இந்த வழியில், ஒரு நிலை இழப்பு ஏற்பட்டாலும், மற்றவை இலாபத்தை உருவாக்கலாம், இழப்புகளை ஈடுசெய்யவும் மூலதனத்தைப் பாதுகாக்கவும் அது உதவுகிறது.

- வரம்பிழப்பு நிலைகளைத் தீர்மானித்தல்: ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வரம்பிழப்பு நிலைகளைத் தீர்மானிப்பது பண மேலாண்மையில் அடங்கும். வரம்பிழப்பு என்பது முன்னமைக்கப்பட்ட நிலை, மேலும் இழப்புகளைத் தடுக்க அந்த நிலை மூடப்படும். வரம்பிழப்பு நிலைகளை அமைப்பது சந்தை பகுப்பாய்வு (market analysis) மற்றும் நீங்கள் தாங்கத் தயாராகவுள்ள இழப்புகளின் அளவை அடிப்படையாகக் கொண்டது. இது உங்கள் மூலதனத்தைப் பாதுகாக்க உதவுகிறது, மேலும் சாதகமற்ற சந்தை நகர்வுகளின்போது கடுமையான இழப்புகளைத் தடுக்கிறது. 

What is Money Management and how to use it_ta

பண மேலாண்மை எடுத்துக்காட்டுகள்

எடுத்துக்காட்டு 1. நிலை அளவு: உங்களிடம் $10,000 மூலதனம் இருப்பதாக வைத்துக்கொள்வோம், மேலும் ஒரு பரிவர்த்தனையில் 2%க்கு மேல் பணயம் வைக்காத நிர்வாக உத்தியைப் பயன்படுத்துகிறீர்கள். இதன் பொருள் நீங்கள் $200 மதிப்புள்ள ஒரு நிலையைத் திறப்பீர்கள். மிகவும் சிக்கலான சூழ்நிலையில், நீங்கள் பரிவர்த்தனையை பல கட்டங்களாகப் பிரிக்கலாம், அதாவது, நிலையின் அளவை படிப்படியாக அதிகரிக்கலாம் (உதாரணமாக, முதலில் $100 மதிப்புள்ள ஒரு நிலையைத் திறந்து, அதை $50 ஆகவும், பின்னர் $50 ஆகவும் அதிகரிகத்தல். மொத்த அளவு $200). இழப்பு ஏற்படுத்தும் பரிவர்த்தனையின்போது, இழப்புகள் $200-ஐ எட்டும்போது, அந்த நிலையை (கைமுறையாக அல்லது வரம்பிழப்பு ஒழுங்கு மூலம்) நீங்கள் மூடுவீர்கள்.

எடுத்துக்காட்டு 2. சொத்துப் பல்வகைப்படுத்தல்: பல நிதிச் சொத்துக்களுக்கு இடையே உங்கள் மூலதனத்தைப் பகிர்ந்தளிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உதாரணமாக, நீங்கள் ஃபாரெக்ஸ் சந்தையில் நாணய ஜோடிகளில் 30%, நிறுவன பங்குகளில் 30%, தங்கம் மற்றும் வெள்ளியில் 25%, கிரிப்டோகரன்சிகளில் 15% முதலீடு செய்யலாம். இந்த சொத்து பல்வகைப்படுத்தல் ஒரு பகுதியில் சாத்தியமான இழப்புகளிலிருந்து உங்களைப் பாதுகாத்து, மற்றொரு பகுதியில் இலாப வாய்ப்புகளை உருவாக்குகிறது. இருப்பினும், அபாயங்களைத் திறம்பட தடுக்க, இந்த நிதிசார் முறையாவணங்கள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன (நேரடி அல்லது தலைகீழ் தொடர்பு) என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எடுத்துக்காட்டு 3. இழப்பு நிலைகளை வரையறுத்தல்: எக்ஸ்ஒய்இசட் (XYZ) நிறுவனப் பங்குகளுக்கான சிஎஃப்டி (CFD) சந்தையில் உங்களுக்கு ஒரு நிலை உள்ளது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வரம்பிழப்பு ஒழுங்கை அதன் கொள்முதல் விலையில் இருந்து 5% அளவில் வைக்கிறீர்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் பங்கை $100க்கு வாங்கினால், உங்கள் வரம்பிழப்பு ஒழுங்கு $95 ஆக அமைக்கப்படும். இந்த பாதுகாப்பின் விலை இந்த நிலைக்கு குறைந்தால், மேலும் இழப்புகளைத் தடுக்க இந்த நிலை மூடப்படும்.

ஃபாரெக்ஸ் மற்றும் சிஎஃப்டி (Forex and CFD) சந்தைகள் ஆபத்துக்கு உட்பட்டவை என்பதையும், சாதகமற்ற சூழ்நிலைகளுக்கு எதிராக எந்த உத்தியும் முழுப் பாதுகாப்பை வழங்க முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, உங்கள் வரம்பிழப்பு ஒழுங்கு தூண்டப்படுவதை நீங்கள் அடிக்கடி பார்த்தால், உங்கள் வர்த்தகத்தை நிறுத்தி, ஓய்வு எடுத்து, இழப்புக்கான காரணங்களை கவனமாகப் பகுப்பாய்வு செய்வது நல்லது. சூதாட்டம் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், மேலும் ஒரு வர்த்தகர் நிலைமையை சரியாக மதிப்பிடுவதற்கு தங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வர்த்தக பாணியும் உத்தியும் (trading style) தற்போதைய சந்தை ஏற்ற இறக்கத்திற்கு பொருந்தாமல் போகலாம், மேலும் நிலைமை அமைதியாகும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். ஒருவேளை, பிற நிதிசார் முறையாவணங்கள் உடனான பரிவர்த்தனைகளுக்கு உங்கள் உத்தியைப் பயன்படுத்த வேண்டும், அல்லது அதை மற்றொன்றுக்குக்கு கூட மாற்றவும்.

நிதிச் சந்தை குருக்கள் என்ன ஆலோசனை கூறுகிறார்கள்?

மூலதனத்தைக் கையாளுதல் (பண மேலாண்மை) தொடர்பாக புகழ்பெற்ற முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோரிடம் இருந்து சில ஆலோசனைகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன:

● வாரன் பஃபெட்:

- "உங்களுக்குத் தேவை இல்லாதவற்றிற்காக உங்களிடம் உள்ளதைப் பணயம் வைக்காதீர்கள்."

– "உங்கள் மூலதனத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஒருமுறை தொலைந்துவிட்டால், மீண்டும் இவ்விளையாட்டில் ஈடுபடுவதற்கு அதிகப் பணம் தேவைப்படுகிறது."

– "அதிக அபாயங்களை எடுத்துக் கொள்ளாதீர்கள். குறைவாக சம்பாதித்து உங்கள் மூலதனத்தைப் பாதுகாப்பது நல்லது."

● பால் டியூடர் ஜோன்ஸ்:

- "முதலீடு செய்வதில் மிக முக்கியமான விஷயம் உங்கள் மூலதனத்தைப் பாதுகாப்பதாகும். இலாபம் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும்."

-"எப்போதும் உங்கள் ஆபத்தை நிர்வகியுங்கள். உங்களால் ஆபத்தை நிர்வகிக்க முடியாவிட்டால், நீங்கள் ஒருபோதும் வெற்றியை அடைய மாட்டீர்கள்."

● ஜார்ஜ் சொரோஸ்:

– "ஒருமுறை வரம்பிழப்பு அளவை நீங்கள் அமைத்தவுடன், அதை ஒருபோதும் மாற்ற வேண்டாம். இது உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், கணிசமான இழப்புகளைத் தவிர்க்கவும் உதவுகிறது."

– "ஒரே வர்த்தகத்தில் உங்கள் மூலதனத்தில் 2%க்கு மேல் பணயம் வைக்காதீர்கள். இது அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு போதுமான மூலதனத்தைப் பாதுகாக்க உதவுகிறது."

● ரே டாலியோ:

- "உங்கள் மூலதனத்தை பல்வேறு சொத்துக்கள் மற்றும் உத்திகளுக்கு இடையே விநியோகிக்கவும். உங்கள் முட்டைகள் அனைத்தையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள்."

- "இலாபங்கள் மற்றும் இழப்புகள் வர்த்தகத்தின் தவிர்க்க முடியாத பகுதியாகும். இடர்களை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வது முக்கியம்."

● லிண்டா ராஷ்கே:

- "இழக்கும் நிலைக்கு மூலதனத்தைச் சேர்க்காதீர்கள். உங்கள் இழப்புகளை மட்டுப்படுத்தி, உங்கள் மூலதனத்தை அதிக நம்பிக்கைக்குரிய வாய்ப்புகளுக்கு மறு ஒதுக்கீடு செய்வது நல்லது."

- "உங்கள் உத்தி மற்றும் திட்டத்தில் உறுதியுடன் இருங்கள். உணர்ச்சிகள் உங்கள் வர்த்தக முடிவுகளை பாதிக்க அனுமதிக்காதீர்கள்."

புகழ்பெற்ற முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோரின் இந்த ஆலோசனைகள் மூலதன மேலாண்மை, அதன் பாதுகாப்பு (இலாபத்தின் இழப்பில் கூட), இடர் கட்டுப்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மூலதன மேலாண்மை என்பது தொடர்ச்சியான கண்காணிப்பு, பகுப்பாய்வு, மாற்றியமைத்தல் ஆகியவை தேவைப்படும் ஒரு செயல்முறை என்பதை மறந்துவிடாதீர்கள். இதற்காக, ஒவ்வொரு வர்த்தகரும், முதலீட்டாளரும் தங்கள் நிதி திறன்கள் மற்றும் இலக்குகளை கருத்தில் கொண்டு, தங்கள் சொந்த உத்தியை உருவாக்க வேண்டும். கற்றல், நிதி திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், வர்த்தகத் துறையில் நிலையான முன்னேற்றம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நினைவில் கொள்வது அவசியம். இந்த எல்லாக் காரணிகளின் கலவையும் மட்டுமே சீரற்ற வெற்றிகள், தோல்விகளில் இருந்து தொழில்முறையான மற்றும் நிலையான இலாபத்திற்கு வழி வகுக்கும்.

திரும்பிச் செல்லவும் திரும்பிச் செல்லவும்
இந்த இணையதளம் குக்கிகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் குக்கீஸ் கொள்கை பற்றிய விவரங்களை அறிக.